எரிபொருள் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சி: இலங்கை கடல் எல்லையை வந்தடைந்தது லேடி நெவஸ்கா

40 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளுடன் வருகை தரும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு சொந்தமான லேடி நெவஸ்கா என்ற கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளது.
இந்த கப்பலின் மூலம் கொண்டு வரப்படும் எரிபொருள் முத்துராஜவெல எரிபொருள் விநியோக குழாய் மூலம் விநியோகிக்கப்படும் என கொழும்பு துறைமுக பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கப்பல் பெற்றோல் விநியோக பகுதியை வந்தடைவதற்கு முன்னர் பெற்றோலின் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இதனை பரிசோதிப்பதற்காக அங்கு பரிசோதனையாளர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளைய தினம் பிற்பகல் 2 மணியின் பின்னர் நாடு பூராகவும் பெற்றோலை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகும் கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.