இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் கருத்தை நிராகரித்துள்ள சீனா

இலங்கைக்கு சீனா வழங்கும் உதவிகள் குறித்து அமெரிக்க அதிகாரி வெளியிட்ட கருத்தை சீன தூதுவர் ஈ சியாங்லிங் நிராகரித்துள்ளார்.
அமெரிக்காவின் உதவி செயலாளரான எலிஸ் வெல்ஸ், அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றும்போது சீனாவின் சலுகையற்ற கடன்கள் காரணமாக இலங்கையில் கடன்சுமை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இதனை மறுத்துள்ள சீன தூதுவர் இலங்கைக்கு சீனா சலுகை அடிப்படை கடன்களையே 2.0 வீதத்தில் வழங்குவதாக தெரிவித்துள்ளார். வளர்முக நாடு ஒன்றுக்கு வழங்கும் அதிகபட்ச உதவியாக இது அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை சீனா இலங்கைக்கு 220 பில்லியன் ரூபாவை திட்டக்கடன்களாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.