அருணாச்சலப்பிரதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அருணாச்சலப்பிரதேசத்தில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் இது 6.4 ஆகப் பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்திய- சீன எல்லையான அருணாச்சலப்பிரதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கு சீனா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருணாச்சலப்பிரதேசதம் வரை ஏற்பட்டது. முதலில் 6.7 ஆக ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம் பதிவானதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் ரிக்டர் அளவில் 6.4 ஆக நில அதிர்வு பதிவாகியுள்ளது.

தெற்கு சீனப் பகுதியில் தாக்கம் அதிகம் எனக் கூறப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டு சில மணி நேரமே ஆகியிருப்பதால் பாதிப்புகள் குறித்த முழு விபரம் ஏதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தென் சீனாவின் திபத்திய பீடபூமீயில் சுமார் 10 கி.மீ ஆழத்துக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் சர்வே அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சுமார் 240 கி.மீ தொலைவுக்கு இந்திய- சீன எல்லையில் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.