நாடு பூராகவும் எரிபொருள் நெருக்கடி! பெருந்தொகை வருமானம் பெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இலங்கையில் கடந்த சில தினங்களாக நிலவிய எரிபொருள் நெருக்கடியால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு நல்ல வருமானம் கிடைத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எரிபொருள் நெடிக்கடி ஏற்பட்ட நான்கு நாட்களில் மேலதிகமாக 422 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் 37 இலட்சம் மெற்றிக் தொன் எரிபொருள் தேவைப்பாடு உள்ளது. இதில் 32 இலட்சம் மெற்றிக் தொன் எரிபொருள் தேவையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமே பூர்த்தி செய்கிறது. எஞ்சிய தொகையினை ஐஓசி நிறுவனம் வழங்கி வருகிறது.

கடந்த 3ம் திகதி நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இவ்வாறான நிலையில் கடந்த 4ம், 5ம், 6ம் திகதிகளின் அதிகப்படியான எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

4ம் திகதி 44 இலட்சம் லீற்றர் பெற்றோலும், 5ம் திகதி 10 இலட்சம் லீற்றர் பெற்றோலும், 6ம் திகதி 38 இலட்சம் லீற்றர் பெற்றோலும் விநியோகிக்கப்பட்டதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

வழமையை விடவும் குறித்த நான்கு நாட்களில் 26 இலட்சம் லீற்றர் பெற்றோல் மேலதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கூட்டுத்தபானத்தினால் விநியோகிக்கப்படுகின்ற எரிபொருளுக்கு 16 ரூபா இலாபம் கிடைக்கின்ற நிலையில் 26 இலட்சம் லீற்றர் பெற்றோலுக்கு 422 இலட்சம் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.