பாண்டிருப்பு மாணவன் இளம் விஞ்ஞானி தெய்வநாயகம் மதிவதனுக்கு தேசியவிருது!!

                                                                                        - செ.துஜியந்தன் *
மதிவதனின் தனது சிறுவயது கனவு நிறைவேறிய ஒரு தருணம் ஆகும்.சிறுபான்மை இனத்தவர்களும் .யுத்த சூழ்நிலைகளும்.பல சாதனையாளர்கள் உருவாகுவதற்கு வழிவகுக்கவில்லை இதனால் இலைமறைகாயாக இருந்த விஞ்ஞானிகளும் ,சாதனையாளர்களும் சரியான களம் கிடைக்காமல் முளையிலே கருகிய சம்பவங்களும் நடந்துள்ளது.

இத் தருணத்தில் வானில் தோன்றும் மின்னல் கீற்றுகளை போல சில சாதனைகளும் இடம் பெறுகின்றது.

கல்முனை பாண்டிருப்பினை சேர்ந்த தெய்வநாயகம் மதிவதன். (இலங்கை சட்டக்கல்லூரி மாணவன்)

அவது கண்டுபிடிப்பினை நோக்கும் போது hybrid power system ஆகும் .இது ஒரு மடிக்கண்ணி மின்கலத்தினை எடுத்து ..அதில் உள்ள மின்சாரம்,மின்னழுத்தம் ,எனபவற்றினை 3v,6v,9v,12v என்ற அடிப்படையில் மின்சாரத்தினை பிரித்து அதன் மூலம் எமக்கு தேவையான மின்சார அளவினை பயன்படுத்தி..camera,smart phone ,portable fan,charger light,searching light,.warning tune.போன்றவற்றினை மின்னேற்ற கூடியவகையிலும் ,வீட்டு மின்சாரம் தடைப்படும் சந்தர்பதிலும் , சுற்றுலா பிரயாணங்களின் போது தங்களது மின் சாதனங்களை மின்னேற்றி பாவிக்க கூடிய வகையிலும் ,,....அதி உயர் அழுத்தம் (220v , 50hz ) மின்சாரத்தினை பாவிக்க கூடிய வகையிலும் உருவாக்கியுள்ளார்.

(ஆயிரம் படைப்புகள் ) என்ற புத்தாக்க போட்டியில் மாவட்டமட்டம் , மகாணமட்டம், தேசியமட்டம் வரையிலும் எனது கண்டுபிடிப்பு தெரிவாகி தேசியவிருதும் கிடைத்துள்ளன. இதில் தேசியமட்ட சான்றிதல் ,பதக்கம்,பணப்பரிசாக 50000/- கிடைத்தது.. இவர் பல கண்டுபிடிப்புகளை தயாரித்து தேசிய மட்டம் சான்றிதலும் பெற்றுள்ளார்....

கை ஊனமுற்றோர் computer இயக்கும் முறை கண்டுபிடிக்கபட்டுள்ளது.......(காலினை பயன்படுத்தி computer இயக்குவதாகும்). (Hand disable peoples using computer)).

ஒளிரும் பற்தூரிகை மற்றும் lighting tooth brush,,,multi switching system ,போன்ற விடயங்களை கண்டு பிடித்துள்ளார் அது மட்டுமல்லாது இலங்கையின் அடிப்படை சட்டங்களை வாசிக்கும் ரோபோ (Robot) தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

இவருடைய தந்தை தெய்வநாயகம் (ஒய்வு நிலை கிராம உத்தியோகத்தர்அவரது கண்டுபிடிப்பு ,ஆராய்ச்சி எனபவற்றினை ஊக்குவித்து ,அதற்கான பண உதவியும் கொடுத்து உதவுபவார் . இவரின் திறமை மேலும் வளர வாழ்த்துகிறோம் ..
No comments

Powered by Blogger.