யாழில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் மீசாலையில் நேர்ந்துள்ளது.

உயிரிழந்த நபர் ரயில் வருவதை அவதானிக்காது, மோட்டார் சைக்கிளில் கடவையைக் கடக்க முற்பட்ட போது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீசாலையை சேர்ந்த 38 வயதுடையவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.