மசகு எண்ணெயுடன் வரும் கப்பல்! இலங்கையில் இறக்குவதில் மீண்டும் குழப்பம்

இலங்கையில் எரிபொருள் விவகாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், போக்குவரத்து சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில் நாளையதினம் கப்பல் ஒன்று வரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் நாளையதினம் இலங்கை வந்தடைந்தாலும், அவற்றினை இறக்குவதில் சிக்கல் நிலை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடி குறித்து துறைசார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இதன்போது எரிபொருள் கப்பல் நாளை வரவுள்ள நிலையிலும், அதனை உடனடியாக இறக்கக்கூடிய வளம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

கப்பலிலிருந்து மசகு எண்ணை இறக்குவதற்காக காணப்பட்ட இரு இயந்திரங்களை கடந்த காலங்களில் நாம் சரியாக பயன்படுத்தவில்லை.

குறித்த இயந்திரங்களை பயன்படுத்தியிருந்தால் அதற்காக நாம் முதலீடு செய்திருக்க வேண்டும். பல வருடங்களாக நாம் அதனை பராமரிக்கவில்லை.

இவ்வாறான நிலையில் நாளை வரும் கப்பலில் இருந்து எண்ணெயை உடன் இறக்குவது சாத்தியம் குறைவு என அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை எரிபொருளை பெற்றுக்கொள்வதில் வாகன சாரதிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நேற்றிரவு முதல் இன்று காலை வரையில் பல சாரதிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்றுள்ளனர்.

தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலையை அடுத்து பொலிஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.