ஓரிரு வரிகளில் உலக செய்திகள்!!

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

இரான் அதிபர் ஹசன் ருஹானி

இரான் மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு எதிரான வார்த்தை போரில் செளதி அரேபியா தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. லெபனன் தீவிரவாத குழுவான ஹெஸ்புல்லா குழுவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை போர் பிரகடனமாக அது கருதுவதாக செளதி குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று, ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் செளதி அரேபிய தலைநகரை குறிவைத்து ஏவிய ஏவுகணை ஒன்றுக்காகவும் இரான் மீது செளதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது.


கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டொனால்ட் டிரம்ப், இன்னும் சிலமணி நேரங்களில் தென்கொரியா சென்றடைய உள்ளார். ஜப்பானிலிருந்து கிளம்புவதற்குமுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஒரு சிறந்த மனிதர் என்று வர்ணித்துள்ளார். மேலும், வட கொரியாவிடமிருந்து வரும் அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வழி குறித்து இருவரும் பேசுவோம் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

பாரடைஸ் பேப்பர்ஸ் என்று அறியப்படும் ஆவணங்களில், பிரபல ஆப்பிள் நிறுவனம் சர்வதேச அளவில் பெற்றுவந்த லாபத்திலிருந்து குறைவான வரியை செலுத்தி வந்த ஏற்பாடு ஒன்றை அயர்லாந்து மூடியதையடுத்து, அந்நிறுவனம் புதிய வரிசலுகைகளை பெற புதிய வழிகளை தீவிரமாக தேடி வந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி விலக்கு பற்றிய அதிகாரபூர்வ உத்தரவாதங்களை பெற ஏழு வரி சலுகை பெறும் இடங்களை ஆப்பிள் நிறுவனம் தொடர்பு கொண்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பிறகு, ஆப்பிள் நிறுவனம் ஜெர்ஸியை தேர்வு செய்தது. அங்கு இந்நிறுவனம் செலுத்தும் வரி கிட்டத்தட்ட மாறாமல் அப்படியே உள்ளது.

அமெரிக்க நீதிபதி ஒருவரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டதையடுத்து இந்திய பிரஜை ஒருவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைக்காவலில் இருக்கும் யஹ்யா ஃபாரூக் முகமது அல்-கய்தாவிற்கு பணம் அனுப்பியதாகவும், அதேசமயம் சிறையிலிருந்த மற்றொரு கைதியிடம் தனது வழக்கை விசாரிக்க இருக்கும் நீதிபதி ஜாக் ஸவரியை கடத்தி கொலை செய்ய 15 ஆயிரம் டாலர்கள் வழங்கி. முன்வத்ததாகவும் ஓஹியோ நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மியான்மரில் உள்ள ரக்கைன் மாகாணத்தில் நிகழ்ந்துவரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், வங்கதேசத்திற்கு தப்பிச்சென்ற பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்சா அகதிகள் மீண்டும் மியான்மருக்குள் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது

No comments

Powered by Blogger.