பேஸ்புக் பயன்படுத்துகிறீர்களா? இந்த முக்கிய தகவலை அவசியம் படியுங்கள்

சமூக வலைத்தளமான பேஸ்புக்கால் இளைய சமுதாயம் மிகவும் பாதிக்கப்படுவதாக அதனை உருவாக்கியவர்களில் ஒருவரான சீன் மார்க்கர் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் என்ற சமூக வலைத்தளத்தை உருவாக்க மார்க் ஜூக்கர்பெர்க் முதல் ஆலோசனை வழங்கினாலும், அதனை வடிவமைத்து அமெரிக்காவில் உள்ள சிலிகான் வேலியில் ஒரு மாபெரும் நிறுவனத்தை அமைக்க முக்கிய காரணமானவர் சீன் மார்க்கர்.

இந்நிலையில், நேற்று புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு கூட்டம் ஒன்றில் சீன் மார்க்கர் பங்கேற்று பேசியுள்ளார்.

அப்போது, ‘சமூக வலைத்தளங்களால் குழந்தைகள் உள்பட இளைய சமுதாயத்தினரின் மூளை பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

இதன் மோசமான விளைவுகள் கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

பேஸ்புக்கை உருவாக்கியபோது உலகம் முழுவதும் உள்ள மக்களின் நேரத்தை எப்படி ஈர்ப்பது என்ற நோக்கத்தில் தான் மார்க் ஜூக்கர்பெர்க் இதனை தொடங்கினார்.

ஆனால், இதன் விளைவுகள் இவ்வளவு மோசமானதாக அமையும் என நாங்கள் அப்போது சிந்திக்கவில்லை.

பேஸ்புக்கில் ஒருவர் வெளியிடும் பதிவிற்கு அதிகளவில் லைக்ஸ் கிடைத்தால் அவர் அடுத்தடுத்து பதிவுகளை வெளியிட தூண்டப்படுகிறார்.

இதனால் அவரது நேரம் அதிகளவில் பேஸ்புக்கால் செலவழிக்கப்படுகிறது. இதன் விளைவாக அவர் பேஸ்புக்கில் அடிமையாக மூழ்கிவிடுகிறார்.

சமூக வலைத்தளங்கள் அதிக நேரத்தை வீணடிக்கும் என்பதால் அவற்றின் மீது நான் அதிகளவு கவனம் செலுத்துவதில்லை.

சமூக வலைத்தளங்களை நான் விரும்பினால் தான் பயன்படுத்துவேன். என்னை பயன்படுத்திக்கொள்ள அவற்றை நான் அனுமதிப்பதில்லை’ என விளக்கம் அளித்துள்ளார்.

இறுதியாக, ‘எனது இக்கருத்தால் பேஸ்புக்கில் இருந்து மார்க் ஜூக்கர்பெர்க் என்னை நீக்கினாலும் ஆச்சர்யம் இல்லை’ என சீன் மார்க்கர் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.