இலங்கையை வந்தடைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர்

அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கை, அவுஸ்திரேலிய இராஜதந்திர உறவின் 70 வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களையும், எதிர்க்கட்சித் தலைவரையும் அவுஸ்திரேலியாவின் பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

முன்னதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் அவுஸ்திரேலிய பயணத்தின் போது அவர்களை சந்தித்திருந்தமை தொடர்பில் அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், இரு தரப்பு பொருளாதார, வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து தமது இலங்கை பயணத்தின் போது பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
 
 

No comments

Powered by Blogger.