புனர் வாழ்வளிக்கப்பட்ட தமிழர் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒன்று கூடல்!!

                                                                                - மட்டு நகர் கமல்தாஸ் -
நேற்று 05/11/2017 புனர் வாழ்வளிக்கப்பட்ட தமிழர் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இணைந்த ஒன்றுகூடல் கிளிநொச்சியிலுள்ள கூட்டுறவு சங்க கட்டத்தில் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் மறைந்த மாவீரர்கள் மற்றும் யுத்தத்தில் மரணித்த பொதுமக்களின் ஆத்ம சாந்தி நிமிட வணக்கத்தோடும் மங்கல விளக்கேற்றியும் இடம்பெற்றது.

இதில் மட்டு அம்பாறை மாவட்ட சிரேஸ்ட உறுப்பினர் கமல்தாஸ் தமது கட்சியின் கொள்கை அறிக்கையினை முன்மொழிந்து ஆரம்பித்து வைத்தார் அதன்பின்னர் பத்திரிகையாளர்களிடம் கட்சியின் தலைவர் க.இன்பராசா விரிவான உரையினை நிகழ்த்தினார்.

பின்பு கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட போராளி திரு பிரபா உரையாற்றினார் அதனைத் தொடர்ந்து காணாமல் போனோர் சங்கத் தலைவி திருமலையினைச் சேர்ந்த திருமதி ஆசா நாகேந்திரன் உரையும் கட்சியின் ஒன்றியப் பிரிவின் சிரேஸ்ட உறுப்பினர் மட்டக்களப்பை சேர்ந்த சசி அவர்களின் ஆதங்க உரையோடும் கட்சியின் ஒன்றுகூடல் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றதோடு பல தீர்மானங்களும் பல கொள்கைகளும் ஆணித்தரமாக பத்திரிகை நிருபர்கள் முன்னிலையில் கூறப்பட்டதுவும் குறிப்பிடத்தக்கது.No comments

Powered by Blogger.