இலங்கையில் வாகனம் வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

2018ஆம் ஆண்டிற்கான பாதீடு சமர்ப்பிப்பதற்கு முன்னர் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கடன் சான்றுகளை திறந்தவர்கள், பழைய முறைக்கு அமைய சுங்க வரி செலுத்த முடியும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும், 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றுடன் மின்சாரத்தில் தொழில்படும் புதிய மகிழுந்தின் (Car) வரி குறைக்கப்பட்டது போல, ஒரு வருடத்திற்குள்ளான பாவனைக்குட்படுத்தப்பட்ட மகிழுந்துகளின் இறக்குமதித் தீர்வைக் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பாவனைக்குட்படுத்தப்பட்ட மகிழுந்துகளுக்கு சுமார் 10 இலட்சம் ரூபா வரை சலுகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது போல் அல்லாமல், உள்ளுரில் பொருத்தப்படும் மகிழுந்துகளுக்கான தீர்வை 30 சத வீதம் என குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.