தமிழ் மக்களின் உரிமை பாதுகாக்கப்படவேண்டுமானால், யுத்தக்குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்.

துறையூர் தாஸன்.

எமது நாடு மிகவும் சுமை கூடிய நிலையில் இருந்து இப்பொழுது மீண்டெழுந்து வருகின்ற நிலையில் காணப்படுகின்றது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்களை பாராட்டும் நிகழ்வு,கல்முனை விவேகானந்தா மகாவித்தியாலய அதிபர் வீ.யோகராசா தலைமையில் இடம்பெற்றபோது,அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய அவர், நாட்டிலே அரசியல் உயர் பீடமாக இருக்கின்ற பாராளுமன்றில் ஒரு சிறப்புரிமை கிடைக்கவில்லை என்று கடந்த கால கூட்டாச்சியாளர்களினாலே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினாலே சர்வேதசத்திடம் தங்களுக்கு நியாயமான உரிமை கிடைக்கவில்லை என கோரப்பட்டிருந்தது.

கடந்த கால யுத்த குற்றச்சாட்டுகள்,மனித உரிமை மீறல்கள் என்பவற்றை மேற்க்கொண்டதற்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்று கேட்கின்றபோது அதனை அவர்கள் எதிர்த்து சர்வதேச விசாரணை தேவையில்லை வெளிநாட்டிலிருந்து விசாரணை அதிகாரிகள் வரத்தேவையில்லை அவர்கள் வருவதால் எங்கள் நாட்டின் இறைமை பாதிக்கின்றது என்று சொல்லுகின்ற அதே முன்னால் ஆட்சியாளர்கள் சரவதேசத்திடம் சென்று தங்கள் உரிமையை வேண்டி நிற்கிறார்கள்.

யுத்தக்குற்ற சாட்டுகளில் யுத்த மீறல்களில் ஈடுபட்ட நபர்களை,ஏன் சரவதேச விசாரணை முன் நிறுத்தக் கூடாது,ஏன் சர்வதேச விசாரணையாளர்கள் விசாரிக்கக்கூடாது என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுகின்றது.

பல தரப்பட்ட இன்னல்களையும் உயிரிழப்புகளையும் சந்தித்த வடகிழக்கிலே இருக்கின்ற தமிழ் மக்களுக்கான உரிமை,ஈடு,அம்மக்களின் தேவை,என்பன பாதுகாக்கப்பட வேண்டுமானால் சர்வதேச ஆணைக்குழு வரவழைக்கப்பட்டு யுத்தக்குற்றச் சாட்டுக்குரியவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்.அவ்வாறு விசாரிக்கப்பட்டு அவர்களுக்குரிய முறையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற சக்தி,வளர்கின்ற இளஞ்சிறார்களின் கையில்தான் இருக்கின்றது.சிறார்கள் நாட்டின் சிறந்த பிரஜைகளாக உருவாக்கப்படுகின்றபோது இந்த நாடு சீர் சிறப்போடு ஆளுகின்ற அபிவிருத்தியடைந்த நாடாக உருவாகுவதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக அமைய வேண்டும் என்றார்.
 

No comments

Powered by Blogger.