தமிழ் ஊடகத்துறை தமிழ் மக்களிடமிருந்து தூர விலகி செல்கின்றதா...?

க.விஜயரெத்தினம்
 
தமிழ் ஊடகத்துறை தமிழ் மக்களிடமிருந்து தூர விலகி செல்ன்றதா? இலங்கையில் தமிழ் அச்சு ஊடகத்துறை விநியோகத்தை பொறுத்தவரை பெரும் வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கின்றது.நவீன மயப்படுத்தப்பட்ட ஊடகத்துறை தொழிநுட்ப உத்திகளுடன் கைகோர்த்து பயணிக்கும் இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் தமிழ் அச்சு ஊடகத்துறை ஏன் இத்தகைய பின்னடைவை சந்தித்துள்ளது என்ற வினா எழுப்பலாம் என சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.தேவராஜ் தெரிவித்தார்.

"தமிழ் அச்சு ஊடகத்துறையின் சமகால போக்கு" என்ற தலைப்பில் மட்டக்களப்பு வொய்ஸ் ஒவ் மீடியா நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய போதே மேலுள்ளவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் :-

இன்று தொழிநுட்ப மாற்றத்தினால் ஊடகத்துறையில் புதிதாக பிரசவம் எடுத்த "டிஜிட்டல்" மற்றும் இலத்திரனியல் வருகையானது அச்சு ஊடகத்துறையை பாதித்ததன் விளைவு என்ற ஒருசார் குறிப்பிட முன்வரலாம்.இன்று இணையத்தளங்கள்,சமூகவலைத்தளங்கள்,தொலைக்காட்சிகள்,வானொலிகள்,போன்றன அச்சுத்துறைக்கு சவாலாக மேலெழுந்துள்ளன என்பது உண்மையாகும்.ஆனால் இந்த சவாலுக்கு ஐரோப்பா, அமெரிக்கா,போன்ற மேலை நாடுகளில் உள்ள அச்சு ஊடகங்களால் முகம்கொடுக்க முடியாது.அந்நாடுகளில் அச்சு ஊடகங்களின் விநியோகித்தல் பெரும் சரிவை ஏற்பட்டது என்பது உண்மையாகும்.

ஆனால் ஆசிய நாடுகளில் உள்ள அச்சு ஊடகங்கள் டிஜிட்டல் ஊடகங்களின் வருகையால் பெரும் பாதிப்புக்குள்ளாகவில்லை என்பதையை ஆய்வுகள் நிரூபித்துள்ளது.ஆசியாவின் அச்சு ஊடகத்துறையின் பிரகாசமான அந்தப்பயணத்தில் இலங்கையும் கைகோர்த்து பயணிக்கின்றது.

2015ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரையும் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி சிங்களம்,ஆங்கிலம் தினசரிப் பத்திரிகையின் விநியோகம் பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது.அதேவேளை தமிழ் பத்திரிகைகளின் விநியோகம் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.குறிப்பாக தமிழ் வாரப்பத்திரிகைகளின் விநியோகம் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அறியத்தருகின்றது.

அதாவது 2015 ஆம் ஆண்டில் இரண்டு கோடியே 16 இலட்சம் இருந்த தமிழ் பத்திரிகைகளின் விநியோகம் 2016 ஆம் ஆண்டில் ஒரு கோடியே 93 இலட்சமாக குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த வீழ்ச்சிக்கு டிஜிட்டல் ஊடகங்களின் வரவே காரணம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டபோதும்,சிங்களம்,ஆங்கிலம் அச்சு ஊடகங்களால் டிஜிட்டல் ஊடகங்களின் சவாலுக்கு எவ்வாறு முகம்கொடுத்து விநியோகத்தல் சாதனை படைக்க முடிந்தது என்ற கேள்விக்கு தமிழ் அச்சு ஊடகத்துறையினர் பதில் கூறவேண்டும் எனத்தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.