கித்துள் கிராமத்தில் கனரக வாகனத்தினால் சேதமடைந்துள்ள சிவன்கோயில் வீதி!!

                                                                                    - க.விஜயரெத்தினம் -
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  கித்துள் கிராமத்தின் உள்ள வீதிகளின் அவலநிலையே இதுவாகும்.கித்துள் கிராமத்தின் சிவன்கோயில் வீதியின் தற்போதைய நிலையே படங்களில் காணலாம்.

தற்போது பிரதேசமெங்கும் மழை பெய்துகொண்டிருக்கின்றது.மழைகாலம் என்பதால் வீதிகளில் காணப்படும் குன்றுகளிலும், குழிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.மழைநீர் தேங்கியுள்ளதால் டெங்குநோய் பரவக்கூடிய வாய்ப்பாக உள்ளது.

இக்கிராமத்தில் உள்ள ஆற்றுப்பகுகளில் மண் ஏற்றப்படுகின்றது. மணல்கள் ஏற்றுவதற்காக வருகின்ற வாகனங்களும்,மண்ணை ஏற்றிச்செல்லும் கனகரக வாகனங்களும் இவ்வீதியையே முழுமையாக பயன்படுத்துகின்றனர். இதனால் சிவன்கோயில் வீதிகள் சேறும் சகதியுமாக காணப்படுவதால் கிராமத்தில் உள்ள பொதுமக்கள்,பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள்,அரச உத்தியோகஸ்தர்கள் மிகவும் கஸ்டத்துடன் பயணிக்கின்றார்கள்.மேலும் தங்களின் ஆடைகளுக்கும்,உடமைகளுக்கும் சேதமேற்படுகின்றது என்று கவலை தெரிவிக்கின்றார்கள்.

பொதுமக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கனரக வாகன போக்குவரத்து சாரதிகள் நடந்துகொள்ள வேண்டும் எனவும்,வீதிகளின் அவநிலைக்கு பிரதேசத்திற்குரிய பொறுப்புவாய்ந்த கிராமசேவையாளர்,அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் இணைந்து கித்துள் கிராமத்தின் வீதிகளை புனரமைப்பு செய்வதற்குரிய ஆவணங்களை தயார்படுத்தி செங்கலடி பிரதேச செயலாளருக்கு உரியமுறையில் தெரியப்படுத்தி தீர்க்கமான வேலைத்திட்டத்தை செய்து வீதியை மீள் புனரமைப்பு செய்து தரவேண்டும் என கித்துள் கிராமத்தில் உள்ள பொதுமக்கள்,மாணவர்கள் கோரிக்கை முன்வைக்கின்றார்கள்.

இந்த வீதியின் அவலநிலைக்கு சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்  துரிதநடவடிக்கை எடுக்கவேண்டும்.அவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் அசமந்தபோக்குடன் செயற்பட்டால் பொதுமக்களாகிய நாங்கள் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை  ஏற்படும் என பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

No comments

Powered by Blogger.