மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்புவிழா

(க.விஜயரெத்தினம்)
 
மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது வியாழக்கிழமை (2.11.2017) பிற்பகல் 2.30 மணியளவில் மகாஜனக் கல்லூரியின் முதல்வர் கே.அருமைத்துரை தலைமையில் இடம்பெற்றது.முதலில் அதிதிகளை மலர்மாலை அணிவித்து மகத்தான வரவேற்களிக்கப்பட்டது.மகாஜனக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவனது எந்தத்தடையுமின்றி இறைவனின் ஆசியுடன் மங்கலமான முறையில் இடம்பெறுவதற்கு மங்கள விளக்கேற்றல்,இறைவணக்கம்,உப அதிபர் நா.சிவலிங்கேஸ்வரன் அவர்களினால் வரவேற்புரையுடன் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான ஞானமுத்து -ஸ்ரீநேசன் அவர்களும், மற்றும் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்வி பணிப்பாளர்(தமிழ்)த.யுவராஜன்,மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பா கே.அருள்பிரகாசம்,முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.சுகுமாரன்,மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் கோட்டக்கல்வி பணிப்பாளர் ரீ.சோமசுந்தரம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கலாச்சார உதவிப்பணிப்பாளர் த.ஈஸ்வராசா,நிருவாகசேவை உத்தியோகஸ்தர் திருமதி.உதயகரன், இக்கல்லூரியின் முன்னாள் அதிபர்களான திருமதி.இராஜகுமாரி கனகசிங்கம்,திருமதி.நேசமணி துரைராஜசிங்கம்,புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபர் கே.பாஸ்கரன்,இலக்கிய வித்தகர் இரா.தவராசா,பிரதி அதிபர்களான பா.குமரகுருபரன்,திருமதி. பாலமுருகன், பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் கே.நீலாகரன்,பழைய மாணவசங்க செயலாளர் ஏ.அருள்பிரகாசம் ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.

தலைமையுரை,கலைநிகழ்வுகள்,பரிசளிப்புக்கள்,பிரதமஅதிதியுரை,பாடசாலைகீதம் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.இந்த பரிசளிப்பு விழாவில் 354 மாணவர்களுக்கு அதிதிகளால் சான்றீதழ்களும்,வெற்றிக்கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.