பாதாள உலகக் குழுத் தலைவர்களை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடும் இலங்கை

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத்தலைவர்கள் நான்கு பேரை கைது செய்ய சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட வேண்டும் என சர்வதேச பொலிஸாரிடம் (இண்டர்போல்) குற்றப் புலனாய்வு பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
முக்கிய பாதாள குழுக்களின் தலைவர்கள் இருவர் தென்னிந்தியாவிலும், மற்றும் இருவர் துபாயிலும் தலைமறைவாக இருப்பதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற மனித கொலை உள்ளிட்ட சில சம்பவங்களுடன் அவர்கள் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையிலேயே அவர்களை கைது செய்ய சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட வேண்டும் என சர்வதேச பொலிஸாரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.