பிரதமரையும் அழைக்கத் தயாராகும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு

மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் சாட்சியங்களை பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

உயர் நீதி­மன்ற நீதி­யரசரும் ஆணைக்குழுவின் தலைவருமான கே.டி. சித்ரசிறி திகதி குறிக்கும் பட்சத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் சாட்சியங்களை பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைக்கும் பட்சத்தில் தாம் முன்னிலையாகுவதற்கு தயார் என பிரதமர் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.