யாழ் - ஆனைக்கோட்டையில் வீழ்ந்த குடும்பஸ்தர் மரணம்!


மாட்டுக்கு புல் வெட்ட சென்ற குடும்பஸ்தர் வெள்ளத்தில் சறுக்குண்டு விழ்ந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (09112017) மாலை இடம்பெற்றது.

ஆனைக்கோட்டையை சேர்ந்த 56 வயதுடைய து.றூபசிங்கம் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பம் தொடர்பில் தெரியவருவதாவது.....

தனது வளர்ப்பு மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக காக்கை தீவு வைரவர் கோவில் பகுதிக்கு சென்றுள்ளார் அங்கு வீதிக்கு அருகாக இருந்து புல்லை வெட்டியுள்ளார்.

அப்போது நிலத்தில் சறுக்குண்டு வெள்ளத்துக்குள் முக குப்பற விழுந்துள்ளார்.

இரவு 7 மணியாகியும் வீட்டுக்கு வராத காரணத்தால் மனைவி இவரை தேடி சென்றுள்ளார்.

அங்கு 2 அடி வெள்ளத்துக்குள் இவர் முகக்குப்பற கிடந்துள்ளாா்.

உடனடியாக யாழ்ப்பாண போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.