இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு சமன் யட்டவர அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வின்படி,

அவரது நேரடி கட்டளையின் கீழ் இயங்கும் போதைப்பொருள் குற்றத் தடுப்பு பொலிஸார் விரைந்து செயற்பட்டதால்,

ஏறாவூர், புகையிரத நிலைய வீதி, காளி கோவில் சந்தியால் சென்றுகொண்டிருந்த 24 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்தபோது,குறித்த தமிழ் இளைஞரிடம் முஸ்லிம் நபர் கொண்டுசேர்க்கும் உத்தரவிற்கு அமைய வைத்திருந்த வேளை கைப்பற்றப்பட்டப்பட்டுள்ளது. அவரிடமிருந்த இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான ஒரு கிலோ அறுநூறு கிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவையும் கைப்பற்றினர்.

உதவி பொலிஸ் பரிசோதகர் திரு மதுசங்க, பொலிஸ் உத்தியோகத்தர் ஜனாப் தாஹா, சார்ஜன்ககளான திரு ரொஹான், திரு ரத்னமால, திரு சந்துருவான் ஆகியோர் உள்ளிட்ட விஷேட புலனாய்வுக் குழுவினரே இக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும், கைது செய்யப்பட்ட நபரையும் இன்று மாலை 03.30மணியளவில் ஏறாவூர் பொலிஸில் ஒப்படைத்தனர்.
 

No comments

Powered by Blogger.