நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு தேசிய வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்து...!இன்று உலகில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள தொற்றாத நோய்களில் முக்கிய நோயான நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்று அவசியம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இன்று முற்பகல் கொழும்பு காலி முகத்திடலில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த தேசிய நீரிழிவு தின நடைபவனி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நீரிழிவு நோய் தொடர்பாக மக்களை அறிவூட்டும் நோக்குடன் நீரிழிவு நோய் மாதமொன்றை பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார மருத்துவ அலுவலகங்களின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் அம்மாதத்தில் நாடளாவிய தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பல்வேறு நிறுவனங்களினால் சந்தைக்கு வரும் பால் பக்கட்டுகளில் உள்ளடங்கியுள்ள சீனியின் அளவை காட்சிப்படுத்துவதற்கும் கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட மென்பானங்களுக்கான வரியை நடைமுறைப்படுத்துவதற்கான தேவையையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பான இத்தகைய உற்பத்திகள் தொடர்பான தீர்மானங்கள் குறித்து எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.