உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத பாம்பினம் இலங்கையில்!

உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத பாம்பு இனம் ஒன்றை சிவனொளிபாத மலை பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிவனொளிபாத மலையின் மேற்கு மலையடிவாரத்தில் இந்த பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பாம்பு தொடர்பாக கண்டுபிடிப்பை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ள ஆராய்ச்சி சஞ்சிகையான சூடாஸ்கா சர்வதேச சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

கண்கொத்தி பாம்பு இன வர்க்கத்தை சேர்ந்த இந்த பாம்பு இலங்கைக்கே உரித்தான இனமாகும்.

இந்த கண்டுபிடிப்புடன் இலங்கைக்கே உரிய 51 பாம்பு இனங்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 104 வகை பாம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சமனல கந்தை அமைந்துள்ள பகுதிகளில் வாழும் உயிரினங்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இந்த பாம்பு இனங்கள் கடந்த 2013ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அலெக்ஸ்சாண்டர் சைரன் உட்பட ஆராய்ச்சியாளர்களால் இந்த பாம்புகளை கண்டுபிடித்துள்ளதுடன் மேலதிக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.