பெரிய கல்லாற்றில் வாகன விபத்து

செ.துஜியந்தன்

பெரிய கல்லாறு பிரதான வீதியில் இடம் அபற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி நிலையில் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற பஸ் வண்டியும், மோட்டார்ச் சைக்கிள் மற்றும் சிறிய ரக டிப்பர் வாகனம் ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது மட்டக்களப்பு பிரதேசத்தில் கடும் மழை பெய்துவருகின்றது. இந் நிலையில் வீதிகளில் விபத்துச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 
 
 

No comments

Powered by Blogger.