கிழக்கின் இந்து எழுச்சி விழா

அகில இலங்கை இந்து சமய சமூக அபிவிருத்திச் சபையினால் நடத்தப்பட்ட கிழக்கின் இந்து எழுச்சி விழா மட்டக்களப்பில் இன்றைய தினம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாச்சார மத்திய நிலையத்தில், அமைப்பின் தலைவர் த.துசியந்தன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, போரதீவுப் பற்று கல்விக் கோட்டத்திலிருந்து இந்த ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள், அவர்களைக் கற்பித்த ஆசிரியர்கள், மற்றும் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்டோர் ஓய்வு பெற்றுச் சென்ற போரதீவுப்பற்றுக் கோட்டக்கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்தப் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இந்து இளைஞர் மன்றங்களுக்கு பஜனைகளை நடத்துவதற்குரிய இசைக்கருவிகள், கூட்டு பஜனை பாடல் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் போன்றோருக்கும் இதன்போது பரிசில்கள் வழங்கப்பட்டன.

மேலும், இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், இந்து மதத் தலைவர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.