இலங்கை வந்துள்ள பாகிஸ்தானின் பி.என்.எஸ் சைய்ப் போர்க்கப்பல்

பாகிஸ்தான் கடற்படையின், பி.என்.எஸ் சைய்ப் என்ற போர்க்கப்பல் நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தினை வந்தடைந்துள்ளது.
123 மீற்றர் நீளமும், 3,114 தொன் எடையையும் கொண்ட இந்த போர்க்கப்பலில் 225 பாகிஸ்த்தான் கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.

கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ள பி.என்.எஸ் சைய்ப் என்ற இந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் பாரம்பரிய முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் கொழும்பில் தரித்து நிற்கும்போது பாகிஸ்தான் கடற்படையினர் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பயிற்சி மற்றும் போட்டி நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பில் இருந்து புறப்பட்டுச்செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.