புதுக்குடியிருப்பில் 12 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

செ.துஜியந்தன்

மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்புக் கிராமத்தில் 12 வயதுச் சிறுமி ஒருவர் தனது வீட்டு அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று 2017-12-30 சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியைச் சேர்ந்த சக்திவேல் ருட்ஷகா (12வயது) மாணவியே உயிரிழந்தவராவார். இவர் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி கற்று வந்துள்ளார். அடுத்தவருடம் 2018 இல் தரம் 8 இல் கல்வி கற்கச் செல்லவிருந்தார். 

இன்று மாலை 5.45 மணியளவில் வேலை முடிந்து வீடு வந்த சிறுமியின் தாய் வீட்டு அறையினுள் பார்த்தபோது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இச் சிறுமி பருவமடைந்து 30 நாட்கள் ஆன நிலையில் இத் துயரச்சம்பவம் நடந்துள்ளது. 

குறித்த சிறுமியின் உயிரிழப்பு பிரதேச மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

No comments

Powered by Blogger.