கொழும்பில் 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை

கொழும்பின் சில பகுதிகளுக்கு 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகத்தடை இன்று(09) மேற்கொள்ளப்படும் என, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இந்த நீர் விநியோகத் ​தடை இன்று(09) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகி நாளை(10) அதிகாலை 5 மணி வரை நடைமுறைப்படுத்த இருப்பதாக அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, மொரகஸ்முல்லமற்றும் ராஜகிரிய முதல் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இந்த நீர் விநியோகம் அமுல்படுத்தப்பட இருக்கின்றது.

No comments

Powered by Blogger.