கிண்ணியாவில் 15 மாணவர்களுக்கு சாதாரண தரப் பரீட்சைக்கான வாய்ப்பை வழங்காத அதிபர்!!

Related image
திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் 15 மாணவர்களுக்கு இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை எழுதுவதற்கான அனுமதிச் அட்டை கிடைக்கப் பெறவில்லை என, 119 என்ற அவசர தொலை பேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 

அப் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தாயே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். 

இம்முறை தனது மகள் சாதாரண தரப் பரீட்சை எழுதவிருந்த நிலையில், அவருக்கு அனுமதி அட்டை வழக்கப்படவில்லை எனவும், இது போன்று 15 மாணவர்கள் உள்ளதாகவும், அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும், இந்த விடயம் குறித்து பொலிஸார், சம்பந்தப்பட்ட பாடசா​லை அதிபரிடம் வினவியுள்ளனர். 

இந்தநிலையில், அந்த மாணவி ஆறு மாதங்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருக்கவில்லை எனவும், மேலும் சில மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றத் தகுதி அற்றவர்கள் எனக் கருதியமையால், அவர்களது விருப்பத்தின் பேரில், பரீட்சைக்கு அனுமதிக்கவில்லை எனவும், குறித்த அதிபர் தெரிவித்துள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments

Powered by Blogger.