பயணிகளின் நன்மைக் கருதி 1750 பஸ் வண்டிகள்

புகையிரத சாரதிகள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பால் பொதுமக்கள் எதிர்​நோக்கியுள்ள பிரச்சினைகளை குறைப்பதுக்காக இலங்கை போக்குவரத்து சபை பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய மேலதிகமாக 1750 பஸ் வண்டிகளை சேவையில்​இணைத்துக்கொள்ளவுள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழமைப் போல் 5700 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,இதற்கு மேலதிகமாக 1000 பஸ்களும்,தூரப் பயணங்களுக்காக 750 பஸ்களும், 60 சொகுசு பஸ் வண்டிகளும் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மாதாந்த புகையிரத அனுமதிச்சீட்டை வைத்திருப்பவர்கள் குறித்த பஸ் வண்டிகளில் இலவசமாக பயணிக்கலாம் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் ஸ்ரீவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசேட சுற்றுநிருபம் ஒன்று சகல பஸ் டிப்​போ அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.