மட்டு- ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் 2018ம் வருடத்தில் 18 சித்தர்களின் ஆண்டோடு கூடிய பௌர்ணமி தின மகாயாகம்!!

எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது 01/01/2018 அன்று மட்டக்களப்பு பெரிய உப்போடையில் அமைந்துள்ள ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் புது வருடமும் அதோடு இணைந்த பௌர்ணமி தினமும் கூடிவருகிறது இந்த புனித நாளில் சற்குரு மகா யோகி திரு.எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகளின் தலைமையில் பக்தர்கள் சூழ மிகவும் பக்திபூர்வமாக பௌர்ணமி தின மகா யாகம் இடம்பெறும். 

இது வரை காலமும் வருட தொடக்க நாளான முதலாம் திகதியையொட்டிய மகா யாகம் மண்டூர் பாலமுனையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் இடம்பெற்று வந்தது ஆனால் இந்த இரண்டாயிரத்து பதினெட்டாம் ஆண்டு பௌர்ணமி தினத்தோடு வருவதால் சித்தர்கள் மகரிஷிகள் ஆணைப்படி மட்டு நகரில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத் தக்கது. 

2018 இன் முதல் நாளாக அமைவது அரிய பல நன்மைகளை இவ்வுலகிற்கு வழங்கும் ஆண்டாக அமையவுள்ளது இதுவரை காலமும் மக்கள் மன நிம்மதியின்றி பல நோய்ப்பிணி பசிப்பிணியால் அல்லலுற்ற காலங்களை மாற்றியமைக்கும் ஆண்டாக மிளிரப்போகின்றது அதனை கருத்தில் கொண்டே இந்த மகாயாகமும் நிகழவுள்ளது.

இவ்வுலகை ஆளும் பதினெட்டு சித்தர்களுக்கு பதினெட்டு நிறை குடம் வைக்கப்பட்டு

அவர்கள் திரு நாமங்களை பாராயணம் செய்து அவர்களை எழுந்தருளச் செய்து பின்னர் காயத்திரி சித்தர் பகவான் ஸ்ரீ முருகேசு சுவாமிகளின் தெய்வீகத் திருப்பாதங்களுக்கு சற்குரு புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் பால்,தேன்,இளநீர்,கொண்டு பாத அபிஷேகம் நிகழ்த்தப்படும் பின்னர் திரு விளக்கேற்றி இம் மாபெரும் உலக சேமத்துக்கான மகா யாகம் நிகழ்த்தப்படும் இம் மகா யாகமானது ஸ்ரீ காயத்திரி தேவி,ஸ்ரீ மிருத்தியுஞ்ஜெயதேவர்,ஸ்ரீ தன்வந்திரி என முப்பெரும் மகா யாகமாகவும் இந்தியாவிலிருந்து சித்தர்கள் ஆசீர்வாதத்தோடு தருவிக்கப்பட்ட 108 உயிர் மூலிகைகள் இடப்பட்டு மகா சக்தி வாய்ந்த மூல மந்திரங்கள் பாராணயத்தோடு அமையப்போவது இலங்கை வாழ் மக்களுக்கு மட்டுமல்ல உலகவாழ் மக்களுக்கும் சாந்தி சமாதானம் நிறைந்த வாழ்வினை அளிக்குமென்பது உண்மையே.

இம் மகா யாகத்தினை தொடர்ந்து மகாயோகி திரு எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் ஆன்மீக அருளுபதேசமும் நிகழ்த்தப்பட்டு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்படும். 

இந்த உலக உய்வுக்கான அருட்பெரும் மகா யாகத்தில் மக்களும் கலந்து இறையருளைப் பெற்று தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்பதற்கமைவாக வாழலாம் என்பது திண்ணம்.

No comments

Powered by Blogger.