வட மாகாண சபையின் 2018ம் ஆண்டுக்குறிய நிதி ஒதுக்கீடு ஏகமனதாக நிறைவேற்றம்!!


வடமாகாண சபையின் 2018 ஆம் ஆண்டிற்குரிய நிதி ஒதுக்கீடு சபையில் ஏகமனதான தீர்மானத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வடமாகாண சபையின் 114வது அமர்வு இன்று வியாழக்கிழமை (14.12) அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. 

வடமாகாண சபையின் 2018 ஆம் ஆண்டிற்குரிய நிதி ஒதுக்கீடு கடந்த 111வது அமர்வின் போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் சமர்பிக்கப்பட்டது. 

அதன்படி கடந்த 3 நாட்களாக விசேட அமர்வுகள் இடம்பெற்று, ஒதுக்கீடுகள் விவாத்திற்குட்படுத்தப்பட்டன. 

உள்ளூராட்சி மற்றும் கல்வி, விவசாயம், சுகதாரம், மீன்பிடி போக்குவரத்து, கூட்டுறவு, மகளிர் விவகாரம் உள்ளிட்ட துறைகளின் ஒதுக்கீடுகள், விவாத்திற்குட்படுத்தப்பட்டு, அங்கிகரிக்கப்பட்டது 

முதலமைச்சர் மொத்த செலவினங்களின் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி நிதி ஒதுக்கீடாக 26 ஆயிரத்து 754 மில்லியனும் 61 ஆயிரம் ரூபாவுக்கு சபையின் அங்கீகாரத்தினை வழங்குமாறு முன்மொழிந்தார். இதனை வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா வழிமொழிந்தார். 

எனவே, வடமாகாண சபையின் 2018 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டு சபையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. 

இதனை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் உத்தியோகபூர்வமாக அறிவித்து 2018 ஆம் ஆண்டிற்குரிய முதலவாது அமார்வினை ஜனவரி மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

No comments

Powered by Blogger.