20 கட்சிகளுடன் இணையும் பொதுஜன முன்னணி


எதிர்வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட 20 கட்சிகள் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 28 ஆம் திகதி இது தொடர்பான உடன்படிக்கை கைக்கசாத்திடப்படவுள்ளது.

இது குறித்த கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

இதன்போது, எதிர்வரும் தேர்தல்கள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.