சட்டவிரோதமாக ஆஸி. செல்லும் முயற்சி தோல்வி: நாடுகடத்தப்பட்ட 29 இலங்கையர்கள்!!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் 29 பேர் நாடுகடத்தப்பட்ட நிலையில், மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதற்கமைய, இன்று காலை அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

இவர்கள் அனைவரும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, ஹக்மன, தங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், நாடு கடத்தப்பட்டவர்களில் 12 மற்றும் 15 வயதான இரு சிறுவர்களும் உள்ளனர். 

அவர்கள் மாமா மற்றும் தந்தையுடன் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர்கள் கடந்த நவம்பர் 27ம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதோடு, நேற்றையதினம் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரால், Lear Mouth கடற்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments

Powered by Blogger.