சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் 2ஆம் திகதி ஆரம்பம்


நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இரண்டு கட்டங்களின் கீழ் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பான விசேட பயிற்சி செயலமர்வு ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி, 30ஆம் திகதி நிறைவடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறும்.

இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் எதிர்வரும் வியாழக்கிழமை வெளியாகும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.