நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து பஸ் விபத்து: இருவர் பலி: 44பேர் காயம்

ஊருபொக்கயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று, பெல்மடுலை, பதுல்பான, தொடம்எல்ல நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலம் 44பேர் காயமடைந்த நிலையில், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 2.10 மணியவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் ஊருபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்கவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இதன்போது காயமடைந்தவர்களில் சிலர் இரத்தினபுரி பொது வைத்தியசாலையிலும் கஹாவத்தை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பஸ் நடத்துனர் குறித்த பஸ்ஸை அதி வேகமாக செலுத்தியமையினால் பஸ் தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பஸ், வீதியோரத்தில் குறி சொல்லும் (சாஸ்திரம் பார்க்கும்) நிலையத்தையும் தகத்தெறிந்த நிலையில் விபத்துக்குள்ளாகியதுடன், இதன்போது குறித்த நிலையத்தில் எவரும் தங்கிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களை பிரதேச மக்களும், இரத்தினபுரி பொலிஸாரும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அத்துடன் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையொன்று, ஓடை நீரில் சுமார் 300 மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டு கல்லொன்றில் சிக்குன்ற நிலையில், விபத்து நடந்து 4 மணித்தியாலயங்களின் பின்னர், அக்குழந்தையின் அழுகுரல் கேட்டு மீட்டதாகவும் இரத்தினபுரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் சாரதியையும் நடத்துநரையும் கைது செய்து, இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


No comments

Powered by Blogger.