மாஸ்க் அணிந்து ஆடும் இலங்கை: இந்தியா 536 ஓட்டங்கள் குவிப்பு


இந்தியத் தலைநகர் டெல்லியில், கடுமையான காற்று மாசுபாடு நிலவுவதால், அங்கு நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர்கள், மூக்கை மூடும் விதமாக ‘மாஸ்க்’ அணிந்து விளையாடி வருகின்றனர்.

டெல்லியில் அதிகாலையில் தொடங்கும் பனிமூட்டமானது சில நாட்களில் பிற்பகல் வரை நீடிக்கிறது.

வாகனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகையானது பனிமூட்டத்தில் கலந்து கரும் புகையாக காற்றில் கலந்துள்ளது.

இதன் காரணமாக மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் வருகின்றன. இந்நிலையில், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

இந்த போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டு வரும் இலங்கை அணி வீரர்கள் மூக்கை மூடும் விதமாக மாஸ்க் அணிந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 2ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, சற்று முன்னர், ஏழு விக்கெட்டுக்களை இழந்து 536 ஓட்டங்களைக் குவித்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்தி, இலங்கைக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

இந்திய அணி சார்பில் அதிரடியாக ஆடிய தலைவர் விராட் கோலி 243 ஓட்டங்களைவும், முரளி விஜய் 155 ஓட்டங்களைவும் விளாசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.