பொலிஸை மிரள வைத்த 5 மீட்டர் மலைப் பாம்பு!!

அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரி ஒருவர், 5 மீட்டர் நீள மலைப்பாம்பை, ரோந்துப்பணியின் போது பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
புகைப்படத்திலுள்ள அதிகாரியும், அவரின் சக அதிகாரியும், குவின்ஸ்லாந்து பகுதியின் வடக்கு பகுதியில், ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது, இந்த பாம்பை கண்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அதிகாரி, அந்த பாம்பு ஊர்ந்து செல்லும் வேளையில் புகைப்படம் எடுத்தார்.

“அந்த பாம்பு ஐந்து மீட்டருக்கும் அதிகமான நீளம் இருக்கும் என்று நிச்சயமாக கூறலாம். ஒரு அளக்கும் கருவியை அருகில் கொண்டுசென்று, அளக்கும் வகையிலான உயிரி அல்ல அது” என்று அந்த காவல்துறை அதிகாரி, பிபிசியிடம் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் எடுத்த இந்தப் புகைப்படத்தை, குவின்ஸ்லாந்து காவல்துறை பகிர, திங்கட்கிழமை மிகவும் அதிகமான சமூகவலைதளங்களில் பரவியது.

இந்த புகைப்படத்தை இரண்டு மில்லியன் மக்கள் பார்த்ததோடு, பத்தாயிரம் பேர் இது குறித்து கருத்து கூறியுள்ளனர்.

“நாங்கள் சாதாரண விஷயங்களை செய்வதில்லை” என்று அந்த பதிவில் குறிப்பிடப்படுகிறது.

“உங்களின் பணிநேரத்தில் நீங்கள் எதைத்தாண்டி வருவீர்கள் என்பது உங்களுக்கு எப்போதுமே தெரியாது”

கைரன்ஸ் நகரின் வடக்குப்பகுதியில், 345 கி.மீட்டர் தொலைவில், வுஜுல் வுஜுல் என்ற இடத்தின் அருகில் அதிகாரிகள் இந்த பாம்பை பார்த்தனர்.

ஸ்கிரப் பைத்தான் என்ற இந்த வகை பாம்புகள், ஏழு மீட்டர், அதாவது 23அடி வரையில் வளரக்கூடியது என்கிறது ஆஸ்திரேலிய உயிரியல் பூங்கா.

No comments

Powered by Blogger.