ஜெயலலிதா மரணம்: 60 பேருக்கு சம்மன்!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மரணம் குறித்து விசாரித்து வரும் விசாரணை ஆணையம் 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. 

சென்னை எழிலகத்தில் உள்ள கலசமஹாலில் இயங்கி வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், சுமார் 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆறுமுகசாமி, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான தகவல்கள் தெரிந்திருக்கும் என்று சந்தேகிக்கப்படும் சுமார் 60 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பப்பட்டவர்களில் 27 பேர் நேரில் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளனர். 

சம்மன் அனுப்பப்பட்டவர்களின் விவரங்களைக் கேட்டபோது, சம்மன் அனுப்பப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட்டால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் தற்போதைக்கு வெளியிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும், விசாரணை ஆணையத்திடம் இதுவரை ஜெயலலிதா மரணம் தொடர்பாக 25 பிரமாணப் பத்திரங்களும், 70க்கும் மேற்பட்ட புகார் கடிதங்களும் வந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.