நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு தாக்கல் செய்யப்பட்ட 69 வேட்பு மனுக்களில் ஒன்று நிராகரிப்பு.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஒன்பது பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களும் அட்டன் டிக்கோயா நகர சபைக்குமான வேட்புமனுவும் (21.12.2017) அன்று தாக்கல் செய்யப்பட்டது. நுவரெலியா மாநகர சபை தலவாக்கலை லிந்துலை நகரசபைக்கான வேட்புமனுக்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அட்டன் டிக்கோயா நகர சபைக்கு

ஜக்கிய தேசியகட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஆகிய ஆறு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

வலப்பனை பிரதேச சபை

ஜக்கிய தேசிய கட்சி, ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஆகிய ஜந்து அரசியல் கட்சிகளும் யூ.என்.அத்தநாயக்க தலைமையிலான ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுகின்றன.

ஹங்குரன்கெத்த பிரதேச சபை

ஜக்கிய தேசியகட்சி, ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஆகிய நான்கு அரசியல் கட்சியும் இளங்கன் திலக்க தலைமையிலான ஒரு சுயேச்சை குழுவும் போட்டியிடுகின்றன.

நுவரெலியா பிரதேச சபை

ஜக்கிய தேசிய கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜக்கிய மக்கள் கட்சி, லங்கா சம சமாஜ கட்சி, ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஆகிய ஏழு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் லங்கா சம சமாஜ கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை பிரதேச சபை

ஜக்கிய தேசிய கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சமசமாஜ கட்சி, ஆகிய ஆறு அரசியல் கட்சிகளும் பி.எச்.பிரியசாந்த, பி.கே.ரொஹான் தலைமையிலான இரண்டு சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.

அக்கரபத்தனை பிரதேச சபை

ஜக்கிய தேசிய கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜக்கிய மக்கள் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, ஆகிய ஆறு அரசியல் கட்சிகளும் ருவான் பத்திரண தலைமையிலான ஒரு சுயேச்சை குழுவும் போட்டியிடுகின்றன.

நோர்வூட் பிரதேச சபை

ஜக்கிய தேசிய கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஜக்கிய மக்கள் கட்சி, ஆகிய ஏழு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

மஸ்கெலியா பிரதேச சபை

ஜக்கிய தேசிய கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஆகிய ஆறு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

அம்பகமுவ பிரதேச சபை

ஜக்கிய தேசிய கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி, சோசலிஸ்ட் எகோலிதி கட்சி, ஸ்ரீ லங்கா சோசலிஸ்ட் கட்சி, ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி ஆகிய 8 அரசியல் கட்சிகளும் நிமல் குமாரதுங்க தலைமையிலான ஒரு சுயேட்சை குழுவூம் போட்டியிடுகின்றன.

கொத்மலை பிரதேச சபை

ஜக்கிய தேசிய கட்சி, ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜக்கிய மக்கள் கட்சி ஆகிய ஜந்து அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

நுவரெலியா பிரதேச சபையில் போட்டியிடும் லங்கா சம சமாஜ கட்சியின் வேட்பு மனு முறையாக பூர்த்தி செய்யாமையின் காரணமாக அதன் பட்டியல் நிராகரிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் 26 பேர் பெயர் குறிப்பிட வேண்டிய நிலையில் 25 பேரின் பெயர்களே குறிப்பிடப்பட்டுள்ளன.

அதே வேளை அட்டன் டிக்கோயா நகர சபையில் போட்டியிடுவதற்காக ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஒரு வேட்பாளரும் அம்பகமுவ பிரதேச சபையில் ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி சார்பில் ஒரு வேட்பாளரும் நோர்வூட் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வேட்பாளர்களும் கொட்டகலை பிரதேச சபையில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருவரும் ஜக்கிய மக்கள் கட்சியில் ஒருவரும் வலப்பனையில் ஜக்கிய மக்கள் கட்சி சார்பில் மூவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஒருவரும் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பொழுது அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி ஆதரவாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பலத்த பொலிஸ் பாதுகாவல் போடப்பட்டிருந்தாலும், நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கோஷங்களை எழுப்பி பேரணியாக செல்ல முற்பட்ட பொழுது, தேர்தல் சட்ட விதிகளை மீற கூடாது என அதனை தேர்தல்கள் உதவி ஆணையாளர் லீலாநாத் விக்கிரமஆராச்சி நேரடியாக சென்று அதனை தடுத்து நிறுத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டதுடன் அதனை தடுத்து நிறத்தியமை குறிப்பிடத்தக்கது.No comments

Powered by Blogger.