9 மாதங்களில் 334 இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணம்!!

Image result for sri lankan foreign ministry logo
இந்த வருடத்தின் கடந்த 9 மாதங்களில் 334 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான புதிய அறிக்கையினை அமைச்சு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

அதன்படி உயரிழந்தவர்களுள் 229 ஆண்களும்,105 பெண்களும் உள்ளடங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 52 பேர் காணாமல் ​போய் உயிரிழந்துள்ளதுடன்,22 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும், 9 பேர் தாக்குதல்களுக்கு இலக்காகியும்,247 பேர் சுகயீனமுற்று உயிரிழந்திருப்பதாகவும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது இறப்பினை உறுதிப்படுத்தி அமைச்சின் இறப்பு உறுதிப்படுத்தும் பிரிவின் மூலம் காப்புறுதியினை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை வீசா நிறைவடைந்த நிலையில் உயிரிழந்துள்ள ஐவரின் சடலங்களை கொண்டு வந்து நல்லடக்கம் செய்வதற்காக ​வெளிநாட்டலுவல்கள் அமைச்சு 13 இலட்ச ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.