இராணுவக் கல்லூரியின் 92 ஆவது பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்ச்சி…

தியத்தலாவையிலுள்ள இராணுவக் கல்லூரியின் 92 ஆவது பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்ச்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(17) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 191 கெடட் அதிகாரிகள் வெற்றிகரமாக தமது இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து இராணுவ சேவையில் இணைந்து கொண்டார்கள். பயிற்சிக் காலத்தில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய நான்கு அதிகாரிகளுக்கு ஜனாதிபதியால் விருதுகள் வழங்கப்பட்டதுடன், இரண்டாவது லெப்டினன் தரத்திற்கு உயர்த்தும் இலச்சினையும் அணிவிக்கப்பட்டது.

மேலும் குறித்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்யரத்ன, இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க, தியத்தலாவை இராணுவக் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் பிரியந்த சேனாரத்ன உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.No comments

Powered by Blogger.