எவ்.சி.ஐ.டியின் 93 விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு


விசாரணைகள் நிறைவு செய்யப்பட்ட 93 முறைப்பாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குறித்த ஆவணங்களை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரவினர் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஒப்படைத்துள்ளனர்.

சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு 370 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றை விசாரணைகளுக்காக ஏனைய நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, குற்றப்புலனாய்வு பிரிவினர் 38 முறைப்பாடுகளை விசாரிப்பதாவும், அவற்றுள் 24 முறைப்பாடுகள் நபர்கள் தொடர்பிலும், 14 முறைப்பாடுகள் சொத்துக்கள் தொடர்பானது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.