முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மனித எலும்புக்கூடு


முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மனித எலும்புக்கூடு எச்சங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் மண்டை ஓடுகள் உள்ளிட்ட எலும்புத் துண்டுகள் மண்ணில் புதைந்தும் புதையாமலும் அங்காங்கே காணப்படுகின்றன.

இறுதி யுத்தத்தின் போது குறித்த பகுதியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையிலும் அந்தப்பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் தற்பொழுதும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.