சம்பந்தனுடன் மைத்திரி – ரணில் தொலைபேசியில் பேச்சு!

சுகயீனமுற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் உடல்நிலை தேறி வீடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் உடல்நிலைமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு சம்பந்தனிடமே கேட்டு அறிந்துகொண்டனர் எனத் தெரியவந்தது.

அவசர மருத்துவ உதவிகள் ஏதும் தேவைப்படின் உடனடியாகத் தெரிவிக்குமாறு மேற்படி இரு தலைவர்களும் சம்பந்தனிடம் வேண்டுகோள் விடுத்தபோதும் அப்படியான உதவிகள் எதுவும் இப்போதைக்கு தேவைப்படாதென சம்பந்தன் அவர்களிடம் தெரிவித்தார் எனவும் அறியமுடிந்தது.

இதற்கிடையில் சம்பந்தனுக்கு வெளிநாட்டு மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவற்றை செய்துகொடுப்பது குறித்தும் அரசு பரிசீலித்துவருவதாக உயர்மட்ட அரச வட்டாரங்கள் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.