செட்டிபாளையத்தில் கோரவிபத்து மூவர் படுகாயம்! மின்கம்பம் உடைந்து சாய்ந்துள்ளது!!

                                                                                                 - க.விஜயரெத்தினம் -
செட்டிபாளையம் பிரதானவீதியில் இன்று அதிகாலை ஏறாவூரிலிருந்து கல்முனைக்கு கோழிகளை ஏற்றிச்சென்ற மினிரக லோறி விபத்து. மூவர் படுகாயம்.மின்கம்பம் உடைந்துள்ளது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பிரதான வீதியில் இன்று(15.12.2017) வெள்ளிக்கிழமை அதிகாலை 3.55 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வாகனத்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளார்கள் என களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.எம்.சீ.எஸ்.ரத்நாயக்கா தெரிவித்தார். குறித்த கோழி லோறியானது அதிவேகமாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் செலுத்தப்பட்டுள்ளதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றார்கள்.

இந்த விபத்தானது மின்கம்பத்தையும்,மதிலையும் உடைத்துவிட்டு வாகனமானது நிலத்திற்குள் ஒரு அடி புகுந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.வாகனத்தின் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.குறித்த மின்கம்பம் உடைந்து சரிந்துள்ளதால் தனியாருக்கு உரித்தான மின்இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அறிந்து கொண்டவர்கள் தெரிவிக்கையில்

நித்திரையில் நாங்கள் எங்கள் வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தோம். விபத்தினால் பாரிய சத்தம் எங்களுக்கு உணரப்பட்டது.இதனை அறிந்துகொண்டும்,உடனே வெளியே பார்த்தபோது ஏதோ அழுகைச்சத்தம் கேட்டது.உடனே நாங்கள் பொலிஸ் அவசர தொலைபேசி இலகத்துடன் தொடர்பு கொண்டு அறிவித்தோம்.இதில் வாகனத்தை செலுத்தி வந்த சாரதி,உதவியாளர்கள் மூவரையும் பொதுமக்கள்,பொலிசார் மீட்டெடுத்து களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் சேர்த்துள்ளார்கள்.ஷிபான்,முஸம்மில் உட்பட மூவருக்கு கை,கால்களுகக்கு பாரிய சேதமேற்பட்டுள்ளதால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அவசர சிசிச்சை மேற்கொள்ளுவதற்கு மாற்றப்பட்டுள்ளதுடன்,ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஊர்ஜிதம் மற்ற தகவல் தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்து சம்பந்தமாக களுவாஞ்சிகுடி பொலிசார் மேலாடை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

No comments

Powered by Blogger.