தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியில் ஆரோடு நோகேன்.

துறையூர் தாஸன்.

மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியில் முதலாம் இரண்டாம் வருட நாடகமும் அரங்கியலும் பாடநெறி ஆசிரியர் பயிலுனர்களால் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் ஆரோடு நோகேன் நாடகம்,கல்லூரியின் நாடகத் துறை விரிவுரையாளர் திருமதி பி.இளங்கோவனின் நெறியாள்கையில் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் தலைமையில் அண்மையில் மேடையேற்றப்பட்டது.

இந்நாடகம்,தரம் பத்து பதினொன்று நாடகமும் அரங்கியலும் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுத இருக்கும் எழுத்து மற்றும் செய்முறைப் பரீட்சையை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களை கருத்திற்கொண்டே இந்நாடகம் மேடையேற்றப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்வியியல் கல்லூரியை சூழவுள்ள மட்டக்களப்பு பிரதேச பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் சுமார் ஐந்நூறுக்கு மேற்ப்பட்டோர் இதன்போது பார்ப்போராக கலந்துகொண்டனர்.
 
 

No comments

Powered by Blogger.