கருணாஅம்மான் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தினார்.

(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் சுயேட்சைக்குழுவாக போட்டியிடுவதற்கு கருணாஅம்மான் கட்டுப்பணம்செலுத்தினார்.இதுவே அரசியல் வரலாற்றில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவது முதல்தடவையாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று உள்ளுராட்சி மன்றங்கள் தவிர்ந்த ஒன்பது உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்று(11.12.2017) பிற்பகல் 3.45 மணியளவில் தமிழர் ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி-முரளிதரன் எனும் கருணாஅம்மான் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் கட்சியின் செயலாளர் வீ.கமலதாஸ்,வேட்பாளர்கள்,ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள். இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆலையடிவேம்பு பிரதேசசபைக்கும்,திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று பிரதேச சபைக்கும் கட்டுப்பணம் செலுத்தியதாக கருணாஅம்மான் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.