வெளியேறினார் சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி!! ஆட்டங் காணும் கூட்டமைப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், டெலோவிற்கும் இடையில் இன்று மாலை மன்னாரில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

மன்னார் நகர சபை டெலோவிற்கு வழங்கப்பட்ட போதும் அதனை இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிராய்வா மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

டெலோ சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை இடம் பேற்ற போதும் மன்னார் நகர சபையின் ஆட்சி இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

எனினும் குறித்த கோரிக்கையை டெலோ நிராகரித்ததோடு, டெலோவிற்கே வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சந்திப்பில் இருந்து வேளியேறியுள்ளார். இதனால் பேச்சுவார்த்தை தீர்வின்றி நிறைவடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.

சாள்ஸ் நிர்மலநாதன் அரசியலுக்கு அப்பால் மக்களுடன் நன்றாக பழகக் கூடியவர். அத்துடன் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் நின்று மக்கள் பணி செய்யும் மக்கள் செல்வாக்குள்ளவரின் வெளியேற்றம் கூட்டமைப்பின் வெற்றிக்கு ஆபத்தாக மாறுவதுடன் ஏனைய கட்சிகள் ஆசனங்களை பெறுவதற்கு வாய்பாக அமையலாம் என கூறும் அவதானிகள் இதனது தாக்கம் இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்து விடும் என கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.