மாணவர்களின் இலவச சீருடை பாதணிகளுக்கான கூப்பன்களை கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளும் பெற்றோர்!

செ.துஜியந்தன்

கிழக்கில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச சீருடை மற்றும் இலவச பாதணிகளுக்கான கூப்பன்களை கடைகளில் கொடுத்து விட்டு அதற்கு பதிலாக பணம் கேட்டு சில பெற்றோர்கள் தொல்லை கொடுப்பதாக வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் விசம் தெரிவிக்கின்றனர்.

அரசினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச சீருடை, பாதணிகள் ஆகியவற்றுக்கான கூப்பன்களை துணிக்கடை மற்றும் பாதணி விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பெற்றோர்கள் சிலர் அதற்கு பதிலாக பணத்தினை வழங்குமாறு கேட்டுவருகின்றனர். 550 ரூபா பணவவுச்சருக்கு பதிலாக 400ரூபாவும், 1400ரூபா பாதணிகளுக்கான வவுச்சரூக்குப்பதிலாக 1000ரூபா பணமும் கேட்டு சிலர் பெற்றுச் செல்கின்றனர். கடை உரிமையாளர்களும் தமக்கு இலாபம் கிடைத்தால் போதும் என அதனை பெற்றுக் கொள்கின்றனர்.

சீருடைக் கூப்பன் மூலம் வருடப் பிறப்புக்கென ஆடம்பரமான ஆடைகளையும் கொள்வனவு செய்கின்றனர். ஒரு வீட்டில் மூன்று பிள்ளைகள் இருந்தால் ஒருவருக்கு மாத்திரமே சீருடைக்கான துணியினை கொள்வனவு செய்து விட்டு மிகுதி கூப்பன் மூலம் வீட்டுப்பொருட்களையும் கொள்வனவு செய்கின்றனர். இதைவிட ஒரு சில குடிகார தந்தையர் இங்குள்ள மதுபானசாலைகளுக்கு கூட இலசவ சீருடை, பாதணி கூப்பன்களை கொடுத்து விட்டு மதுபானம் அருந்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

அரசாங்கம் கல்விக்காக மாணவர்களுக்குச் செய்யும் இவ் இலவச கொடுப்பனவுகள் சில பெற்றோரால் சரியாகப்பயன் படுத்தப்படுகின்றதா? என்பதை கவனிப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். வியாபாரிகள் இவ்வாறு இலவச கூப்பன்களை தந்து பணம் கேட்பவர்களுக்கு துணைபோகாது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments

Powered by Blogger.