நாட்டு மக்களுக்கு அரிய வாய்ப்புபண்டிகை காலத்தை முன்னிட்டு ஏழு அத்தியாவசிய பொருட்களை சிறப்பு அங்காடிகளிலும் மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக வணிக விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், 372 இலங்கை சதோச விற்பனை நிலையங்களிலும் கார்கில்ஸ், கீல்ஸ், ஆர்ப்பிகோ, லாப்ஸ் ஆகிய சிறப்பு அங்காடிகளிலும் மானிய விலையில் கொள்வனவு செய்ய முடியும்.
  • ஒரு கிலோ சம்பா அரிசி - 71 ரூபா
  • ஒரு கிலோ நாடு அரிசி -74 ரூபா
  • ஒரு கிலோ பெரிய வெங்காயம் -135 ரூபா
  • ஒரு கிலோ சீனி - 100 ரூபா
  • ஒரு கிலோ கிழங்கு - 139 ரூபா
  • 425 கிராம் டின் மீன் - 127 ரூபா
  • ஒரு கிலோ பருப்பு -124 ரூபா
  • ஒரு கிலோ நெத்திலி - 415 ரூபா
இந்த ஏழு அத்தியாவசிய பொருட்களை மேற்கூறிய தனியார் சிறப்பு அங்காடிகளிலும் இதே விலைகளில் பெற்றுக்கொள்ள முடியும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக வணிக விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.